வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (15:07 IST)

''நான் இதைத்தான் காதலிக்கிறேன்''- விஜய் பட நடிகை 'ஓபன் டாக்'

Shooting
தமிழ் சினிமாவில் சாமி இயக்கத்தில், கடந்த 2010 ஆம் ஆண்டு  வெளியயான  சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் அமலா பால்.

அதே ஆண்டு, பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த் நடிப்பில் வெளியான படம் மைனா. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த அமலாபாலுக்கு பாராட்டுகள் குவிந்து, அவரது கேரக்டரில் முக்கிய படமாக அமைந்தது.

இதையடுத்து, தெய்வ திருமகள்,வேட்டை,காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், விஜய்யுடன் இணைந்து தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

சமீபத்தில் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நிர்வாண தோற்றத்தில் நடித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது அமலாபால் புரொடெக்சன்ஸ் சார்பில் அமலாபால் ஹீரோயினா  நடித்த 'கடாவர்' என்ற படம் வரும் 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படம் டிஸ்னி ஓடிடியில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அனூப் எஸ் பணிக்கர் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்டு பேசிய அமலா பால்,  4 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் மறைந்த தந்தையின் ஆசீர்வாதம். இனிமேல் நான் படங்கள் தயாரிக்க மாட்டேன் என்று கூறிய அமலா, தான் சினிமாவை மட்டும் காதலிப்பதாகத் தெரிவித்தார்.