திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (18:03 IST)

நான் அடிக்கடி செய்த தவறு இதுதான்... நடிகர் கார்த்தி ’ஓபன் டாக் ‘

பிரபல நடிகரும், இலக்கிய ஆர்வலரும்  மற்றும் தமிழ்ச் சொற்பொழிவாளருமான சிவக்குமாரின் மகன்கள் சூர்யா, கார்த்தி. இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநயகர்களாக திகழ்கிறார்கள்.
இந்நிலையில்,  சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கார்த்தி, ’எந்நேரமும் நீங்கள் யாருடனாவது உங்களை ஒப்பீடு செய்து கொண்டே இருக்காதீர்கள்.  நாம் தனித்தன்மை என்று நினைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
 
மேலும், நானும் முதலில் என்னை மற்றவர்களுடம் ஒப்பீடு செய்து கொண்டிருந்தேன். எந்த காரணத்துக்காகவும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். நமக்கு கிடைக்காதது மற்றவர்களுக்கு கிடைத்தால், மற்றவர்களின் வெற்றிகாக நாம் சந்தோசப்பட வேண்டுமென தெரிவித்தார்.