நா.முத்துக்குமாரின் கடைசி பட பாடல் இதுதான் - ஏஆர் ரஹ்மான்
இளைஞர்களின் சென்சேஷனான நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவர்களின் சர்வம் தாளமயம் என்ற திரைப்படம் திரைக்கு வெளிவரும் முன்னரே 31-வது டோக்கியோ திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
பீட்டர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷ் அவர்களுடன் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். சிறந்த ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தி கொண்ட ராஜிவ்மேனன் இப்படத்தில் லைவ்-சின்க் சவுண்ட் ரெகார்டிங் என்ற தொழில்நுட்ப உபகரணங்களை வைத்து இயக்கிருக்கிறார். இதற்கு முன்பு ஹேராம் மற்றும் ஆயுத எழுத்து போன்ற மாபெரும் வெற்றி படங்களில் இந்த லைவ்-சின்க் ரெகார்டிங் முறை பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
மைண்ட் ஸ்க்ரீன் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ராஜிவ் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.இதுகுறித்து ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அதில் அதில் கூறியதாவது, மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள் எழுதிய கடைசி வரிகள் இப்படத்தின் பாடல் வரிகள் தான் என்ற செய்தியை மணமுறுகி ராஜிவ் மேனன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் என ரஹ்மான் தெரிவித்துள்ளார்.