திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 மே 2023 (19:17 IST)

’’இது ஆணவமான செயல்’’... பவன் கல்யாணை விமர்சித்த பிரபல நடிகை!

pawan kalyan
தெலுங்கு சினிமா முன்னணி நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள உஸ்தாத் பகத் சிங் படத்தில் முதல்பார்வை வீடியோ இன்று வெளியாகியுள்ள நிலையில் நடிகை பூனம் கவுர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமா நடிகர் பவன் கல்யாண் நடிப்பில், ஹரீஸ் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம்  உஸ்தாத் பகத் சிங். இவர்கள் இருவரின் கூட்டணியில் 10 ஆண்டிற்குப் பிறகு உருவாகியுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் பவன் கல்யாண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல்பார்வை வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில்,  நடிகை பூனம் கவுர் தன் டுவிட்டர் பக்கத்தில், ’’பவன் கல்யாண் காலடியில் உஸ்தாத் பகத் சிங் பட்டம் உள்ளது. இது சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கை அவமதிப்பதாகும் ; இது ஆணவமான செயல்’’ என்று என்று டூவிட் பதிவிட்டுள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படக்குழு இதற்கு விளக்கம் அளிக்குமா? இல்லை போஸ்டரை மாற்றுமா ? என கேள்விகள் எழுந்துள்ளது.