1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 5 அக்டோபர் 2022 (12:00 IST)

இயக்குனர் வெற்றிமாறன் பெரியாரின் பேரன்: திருமாவளவன் புகழாரம்!

Thirumavalavan
இயக்குனர் வெற்றிமாறன் பெரியாரின் பேரன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் புகழாரம் சூட்டியுள்ளார்
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் பெரியாரின் பேரன் என்று திருமாவளவன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
 
இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? 
 
இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர். போராடவும் செயகின்றனர். இந்நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குனர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்" என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva