1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (20:25 IST)

ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் பற்றி பேசுவார்கள்- விஜய் பாராட்டு

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான திரைப்படம் ’தலைவி. இப்படத்தின் பாடல்கள் பற்றி இயக்குநர் ஏ.எல்.விஜ்ய பாராட்டியுள்ளார்.

பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான திரைப்படம் ’தலைவி’. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை .

இந்த நிலையில் ’தலைவி’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்தாலும் படக்குழுவினர் உறுதியாக ஓடிடியில் ரிலீஸ் இல்லை என்று அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டன எனவே தலைவி படம் செப்டம்பர் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் குறித்துப் பேசியுள்ளார்.

அதில், #தலைவி படம் பார்த்துவிட்டு அனைவரும் @gvprakash பாடல்கள் மற்றும் இசை பற்றி கண்டிப்பாகப் பேசுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.  #தலைவி