1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (17:02 IST)

அவங்க சமரசமாயிட்டாங்க... விரைவில் வெளியாகிறது அச்சம் என்பது மடமையடா

அவங்க சமரசமாயிட்டாங்க... விரைவில் வெளியாகிறது அச்சம் என்பது மடமையடா

கௌதம் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குவதால் முறுக்கிக் கொண்ட சிம்பு, அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெற்ற தள்ளிப் போகாதே படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார்.


 
 
அதனால், படம் எப்போது வெளியாகும் என்பதில் இழுபறி நீடித்து வந்தது. பொறுத்துப் பார்த்த கௌதம், தள்ளிப் போகாதே பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்றால் அதற்கு சிம்புதான் பொறுப்பு என்று வெளிப்படையாகவே கொந்தளித்தார்.
 
இந்நிலையில் கௌதம், சிம்பு இடையே சமரசம் எற்பட்டுள்ளது. தள்ளிப் போகாதே பாடல் காட்சியில் நடிக்கவும், டப்பிங் பேசவும் சம்மதித்துள்ளார் சிம்பு.
 
இதன் காரணமாக, இந்த மாதமே படம் திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறார் கௌதம். அச்சம் என்பது மடமையடா படத்தில் நாயகியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். ரஹ்மானின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியிருப்பது முக்கியமானது.