இருட்டடிப்பு செய்யப்பட்ட தெருக்குரல் அறிவு! ஆதரவு தெரிவிக்கும் தமிழ் சினிமா கலைஞர்கள்!
தெருக்குரல் அறிவு எழுத்தில் தீ மற்றும் அவரே பாடிய எஞ்சாயி எஞ்சாமி பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் இரு வாரங்களுக்கு எஞ்சாய் எஞ்சாமி பாடல் யு டியூபில் வெளியானது. இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். குரலில் ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியானது. வெளியானதில் இருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில் இப்போது இந்த பாடல் யுடியுபில் 30 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. தமிழில் பெரிய நடிகர்களின் சினிமாப் பாடல்களுக்குக் கூட கிடைக்காத வரவேற்பு இந்த தனியிசைப் பாடலுக்குக் கிடைத்துள்ளது. இந்நிலையில் ரோலிங் ஸ்டோன் என்ற பத்திரிக்கை மிகவும் பிரபலமான பாடல்களை பாடியவர்களை அங்கிகரிக்கும் பொருட்டு அவர்களின் நேர்காணலையும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டது. ஆனால் அதன் அட்டை படத்தில் தீ படம் மட்டுமே இடம்பெற்றது. அறிவு புறக்கணிக்கப்பட்டதாக இப்போது சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டவர்கள் அறிவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.