1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2016 (12:52 IST)

தெறியின் 4 நாள் தமிழக வசூல்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கியிருக்கும் தெறி தமிழகத்தில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்திய விஜய் படங்கள் எதுவும் தெறி அளவுக்கு வசூலித்ததில்லை.


 
 
கடந்த வியாழக்கிழமை வெளியான படம் முதல் 4 தினங்களில் தமிழகத்தில் 31 கோடிகளை வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. திரையரங்குகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்ட பிறகும் இவ்வளவு அதிக தொகையை படம் வசூலித்துள்ளது.
 
முக்கியமாக, தமிழகத்தின் வசூல் ஏரியாவான செங்கல்பட்டு பகுதியில் பல திரையரங்குகளில் தெறி வெளியாகவில்லை. இருந்தும் அதிரடி வசூலை படம் பெற்றுள்ளது.