கபடதாரிக்கு அடித்த ஜாக்பாட்… இன்ப அதிர்ச்சியில் படக்குழு!
மாஸ்டர் படம் இன்று முதல் திரையரங்குகளில் இருந்து எடுக்கப்படுவதால் கபடதாரி படத்திற்கு அதிகளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளன.
நடிகர் சிபிராஜ் நடித்து வந்த கபடதாரி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் தயாரித்துள்ளார். இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இதையடுத்து இந்த படம் ஜனவரி 28 ஆம் தேதி நேற்று ரிலீஸானது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் இன்று ரிலீஸாகியுள்ளதால் திரையரங்குகளில் இருந்து அந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த வாரம் ரிலீஸான ஒரே படமான கபடதாரிக்கு அதிகளவில் திரையரங்குகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும் வேளையில் திரையரங்கு எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.