வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 29 ஜூன் 2017 (11:12 IST)

விவேகம் படத்தின் அஜித்-காஜல் அகர்வால் லீக்கான வைரல் புகைப்படம்!

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் விவேகம் படத்தில் நடித்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள் அனைவரும் எப்போது விவேகம் படத்தின் அப்டேட் வரும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 
காஜல் அகர்வால் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், அக்ஷரா ஹாசன் மற்றும் விவேக் ஓபராய் இருவரும்  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 
 
விவேகம் படத்தின் ஆரபத்தில் வெளியான அஜித்தின் ஸ்டில் தொடங்கி, டீசர், பாடல் என அவைத்திற்கும் எதிர்பார்ப்பு நாளுக்கு  நாள் அதிகர்த்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் அஜித், காஜல் அகர்வால் ஆகியோர் சேர்ந்திருக்கும்  புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

 
அஜித் சூப்பராக பைக் ஓட்டுவார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த படத்தில் அதையும் தாண்டி பல ரிஸ்க்  காட்சிகள் இருக்கின்றதாம். இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் ரிலீஸாகும் எனத்  தெரிகிறது.