ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (22:02 IST)

ராஜமௌலியின் பிரமாண்ட படத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலம்

இந்திய சினிமாவில் முக்கிய இயக்குநர் ராஜமௌலி. இவரது பாகுபலி 1, 2 ஆகிய படங்கள் இந்திய சினிமாவுக்கு உலகளாவிய கவனத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், இவர் அடுத்து ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை பிரமாண்டமாக இயக்கிவருகிறார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியாபட், உள்ளிட்ட பிரபங்கள் நடித்து வருகின்றனர்.

அக்டோபர் மாதம் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் இதற்காக வேலைகள் வேகமான நடைபெற்று வருகின்றன.

எனவே ராஜமெளலி ஹாலிவுட்டில் பிரபல சண்டை கலைஞர் நிக் பவலுடன் இணைந்துள்ளார். இவர்தான் ஆர்.ஆர்.ஆர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.