திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Updated : சனி, 26 அக்டோபர் 2024 (18:10 IST)

அனல் அரசு இயக்கும் 'Phoenix (வீழான்)' படத்தின் முதல் பாடல் "யாரான்ட" வெளியீடு!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ் திரைப்படமான 'Phoenix (வீழான்)', புகழ்பெற்ற சண்டைப் பயிற்சி இயக்குனர் 'அனல்' அரசு அவர்களின் அறிமுக படமாகும். நடிகர் 'சூர்யா விஜய் சேதுபதி' முன்னணி கதாபாத்திரமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாடல் "யாரான்ட" தற்போது வெளியாகியுள்ளது.
 
இந்த விறுவிறுப்பான பாடலின் வரிகளை திறமையான கவிஞர் வித்யா தாமோதரன் எழுதியுள்ளார், இப்பாடலுக்கு சாம் சி எஸ் அமைத்துள்ள இசை, படத்தின் மையக்கருவை நம் மனதில் பதிய வைக்கிறது. பாடகர் சிவத்தின் பரபரப்பான குரல், பாடலின் மூலம் உணர்வுகளுக்கு உயிரூட்டுகிறது.
 
'Phoenix (வீழான்)' திரைப்படம் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக 'அனல்' அரசு அவர்களின் புதிய முயற்சியாக இருப்பதால், திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 'சூர்யா' அவர்களின் முக்கிய வேடத்துடன், படத்தில் தன்னம்பிக்கை மற்றும் எதார்த்த வாழ்வின் பயணத்தை பிரதிபலிக்கும் ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரைத்துறையின் கவனத்தை இந்த படம் கவர்ந்துள்ளது.