புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 17 அக்டோபர் 2018 (19:33 IST)

சினிமாவுக்கு நிரந்தர முடிவு கட்டிய பிரபல நடிகை

இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு ஒஸ்தி பட நடிகை ரிச்சா கங்கோபத்யாய் அமெரிக்கா சென்றுவிட்டார்.
 
தமிழ் சினிமாவில் மயக்கம் என்ன படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபத்யாய்  அந்த படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வந்த ஒஸ்தி படத்திலும் நடித்துள்ளார். பிறகு தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
 
ரிச்சாவுக்கு  சினிமா வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் இனிமேல் சினிமா பக்கம் திரும்பமாட்டேன் என்று கூறிவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். 
 
இந்நிலையில், இன்று டுவிட்டரில் இதை தெரிவித்த ரிச்சா, என்னுடைய அடுத்த படம் எப்போது என கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள், எனக்கு 90 வயதானால்கூட கேட்பார்கள் என தெரிகிறது. ஆனால் சினிமா என்பது கொஞ்ச காலத்துக்கு தான், மீண்டும் அதில் வர விருப்பமில்லை என தெரிவித்த அவர் அமெரிக்கா சென்று எம்.பி.ஏ படித்துவிட்டு அங்கேயே செட்டில் ஆக உள்ளதாக நடிகை ரிச்சா கங்கோபத்யாய் தெரிவித்துள்ளார்.