1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 30 மே 2017 (22:15 IST)

காலா'வோட நாய்க்கே இந்த மரியாதையா? ஆச்சரியத்தில் பாலிவுட் திரையுலகினர்

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் என்ன காந்தம் இருக்கின்றதோ தெரியவில்லை. அவர் எது செய்தாலும் ஸ்டைல் மற்றும் டிரெண்ட் ஆகிறது. குறிப்பாக 'காலா' பர்ஸ்ட்லுக்கில் ரஜினி உட்கார்ந்திருந்த 'தார்' மாடல் காரை தனக்கு தர வேண்டும் என்று மஹிந்திரா சேர்மன் வாய் திறந்தே கேட்டுவிட்டார். அவர் நினைத்தால் ஆயிரம் கார்கள் வாங்க முடியும், ஆனால் ரஜினி உட்கார்ந்ததாலே அந்த கார் விலைமதிப்பற்றதாகிவிட்டது.



 


இந்த நிலையில் ஃபர்ஸ்ட்லுக்கில் ரஜினிக்கு பின்னால் ஒரு நாய் இருப்பதை அனைவரும் கவனித்திருப்பீர்கள், படப்பிடிப்பு நடந்த தாராவி பகுதியை சேர்ந்த அந்த நாய் தற்போது அந்த பகுதியில் ஃபேமஸ் ஆகிவிட்டது. அந்த நாயுடன் செல்பி உள்பட புகைப்படம் எடுக்க பலர் தொடங்கிவிட்டனர். எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்

நாயின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டாலும், நாய் அந்த பகுதியின் ஹீரோவாகிவிட்டதை பாலிவுட் பிரபலங்கள் அறிந்து ஆச்சரியப்படுகின்றனர். ஃபர்ஸ்ட்லுக்கில் வந்த நாய்க்கே இவ்வளவு வரவேற்பு என்றால்? என்று அவர்கள் பிளந்த வாயை மூடவே இல்லை என்கிறது பாலிவுட் ஊடகங்கள்