வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (14:45 IST)

கோவிலில் புகைப்படம் எடுத்த பிரபல நடிகை : கடுப்பான ரசிகர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற நடிகை நிவேதிதா பெத்துராஜ் செல்போனில் பொற்றமரைக் குளம், வளையல் வாங்குவதையும் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
மீனாட்சு அம்மன் கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்று தடை விதிக்க்பட்டுள்ளது. ஆனால் நிவேதிதா பெத்துராஜ் கோவில் வளாகத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது பிரச்சனை ஆவது குறித்து அறிந்த நிவேதிதா பெத்துராஜ் சமூக வலைதளத்திலிருந்து அந்த புகைப்படத்தை நீக்கியுள்ளார்.கோவிலுகுள் செல்போன் கொண்டு செல்ல அவருக்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று பலரும் கேட்கிறார்கள். 
மக்கள் மட்டுமல்லாது ரசிகர்கள் பலரும் நிவேதிதாவின் இச்செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.