வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (11:23 IST)

கணவருக்காக சமந்தா செய்த செயல்!

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சமந்தா நடித்த அனைத்தும் பயங்கர ஹிட்.  திருமணத்துக்கு பிறகு நடிகைகளுக்கு வரவேற்பு இருக்காது என்ற மாயயை உடைத்து எறிந்து விட்டார். அவர் கைவசம் பல படங்கள் உள்ளன. சமந்தா நடிப்பில் U-டர்ன் படம் செப்டம்பர் 13ம் தேதி திரைக்கு வருகிறது. அதுவும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அவரது கணவர் நாக சைதன்யா தற்போது ஹிட் படங்கள் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் நடிப்பில் உருவாகி வரும் ஷைலஜா அல்லுடு ஸ்ரீனு படத்தின் ரிலீசும் கேரளா வெள்ளத்தை காரணம் காட்டி தள்ளிப்போனது.
 
ஆனால் உண்மையான காரணம் கேரளா வெள்ளம் இல்லை சமந்தா தான் என கூறப்படுகிறது. படத்தை பார்த்த சமந்தா சில மாற்றங்களை செய்யும்படி கண்டிப்பாக கூறிவிட்டாராம். அதை செய்வதற்காகத்தான் தற்போது படம் தள்ளிப்போயுள்ளது.
 
கணவருக்காக சமந்தா அக்கறை எடுத்து இப்படி செய்தாலும், படம் தொடர்ந்து தள்ளிப்போவதால் ரசிகர்கள் அதிருப்தியில்  உள்ளார்கள்.