1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (08:10 IST)

கேஎஸ் ரவிக்குமார் திரைப்படத்தில் ஜோடியாகும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

கேஎஸ் ரவிக்குமார் தயாரிக்க உள்ள ஒரு திரைப்படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் திரையில் ஜோடியாக மாறப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவர் தர்ஷன் என்பதும் இவர் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த படத்தில் தர்ஷன் ஜோடியாக லாஸ்லியா நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. இவரும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த படத்தில் யோகி பாபு உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களான ஷரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஜோடியாக படங்களில் நடித்த நிலையில் தற்போது பிக் பாஸ் 3 போட்டியாளர்களும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்