1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 18 டிசம்பர் 2014 (14:27 IST)

தாரை தப்பட்டைக்காக முதல்முறையாக கடல் தாண்டும் பாலா

பாடல் காட்சிகளுக்கு வெளிநாடு போவது போன்ற அபத்தங்களை இதுவரை பாலா செய்ததில்லை. வருங்காலத்திலும் செய்வதற்கு வாய்ப்பில்லை.
 
தற்போது தாரை தப்பட்டை படத்தை இயக்கி வரும் பாலா படத்தின் சில முக்கியமான காட்சிகளுக்காக அந்தமான் செல்லவுள்ளார். 
 
கரகாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக சொல்லப்படும் இந்தப் படத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிக்கின்றனர். செழியன் ஒளிப்பதிவு. இளையராஜா இசை. 
 
இது இளையராஜாவின் ஆயிரமாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.