புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (14:20 IST)

'இளவரசி டயானா விருது' வென்ற 'தங்கமீன்கள்' சாதனா

'தங்கமீன்கள்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், சாதனா. சமூக சேவைக்கான 'இளவரசி டயானா' என்ற விருதையும் வென்றிருக்கிறார்.

இவர் ஏற்கனவே  தங்க மீன்கள் படத்தில் நடித்ததுக்காக  சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது வென்றிருந்தார். தற்போது   'இளவரசி டயானா'  விருது கிடைத்துள்ளதால் சாதனா பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.

பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் நினைவாக, சமூக மேம்பாட்டுக்குப் பங்களிக்கும் 9 - 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, ஆண்டுதோறும் 'இளவரசி டயானா' விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு, சாதனா பெயரை அவரது பள்ளி நிர்வாகம் அனுப்பியது. அதில், இந்த வருஷம் விருதுவென்ற 50 பேரில் சாதனாவும் ஒருவர்.

இந்த விருதுமூலம், 'இளவரசி டயானா அறக்கட்டளை', அடுத்த ஓர் ஆண்டுக்கு உலகில் எந்த நாட்டில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடத்தினாலும், நானும் கலந்துகொண்டு பேசும் வாய்ப்புட சாதனாவுக்கு கிடைக்கும்.