திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 2 மார்ச் 2020 (20:08 IST)

வாய்ப்பளித்த விஜய் அண்ணாவுக்கு நன்றி !! - மாஸ்டர் பட இயக்குநர் ’டுவீட் ‘

வாய்ப்பளித்த விஜய் அண்ணாவுக்கு நன்றி !! - மாஸ்டர் பட இயக்குநர் ’டுவீட் ‘

’மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், 'வாய்ப்பளித்த விஜய் அண்ணா'வுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
 
மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான குட்டி கதை சிங்கிள் பாடல் தற்போது வரை 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறார்.
 
கடந்த சில நாட்களாகவே நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீமன் மற்றும் பிரேம்குமார் ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளனர்.
 
மேலும், தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதாவது, மாஸ்டர் பட பிடிப்பு 129 நாட்களில் முடிவடைந்துள்ளது.  இந்தப் பயணம் என் இதயத்திற்கு நெருக்கமாக உள்ளது. என்னை நம்பி இந்த வாய்ப்பளித்த விஜய் அண்ணாவுக்கும் எனது குழுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த இமய மலைபோன்ற பணி எனக்கும் எனது குழுவுக்கும் எளிமையாக இல்லை என பதிவிட்டுள்ளார்.