தங்கலான் 2 படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளோம்… வெற்றிச் சந்திப்பில் விக்ரம் தகவல்!
நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்துக்குப் பின்னர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது.
ஆனால் படம் ரிலீஸான பின்னர் கலவையான விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. மேஜிக்கல் ரியலிச பாணியில் படத்தின் கதை சொல்லப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு படத்தின் மேல் ஒட்டுதலை ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது. ஆனாலும் படம் நேற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இந்நிலையில் முதல் நாளில் இந்த படம் 26 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் நடந்த வெற்றி சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விக்ரம் “தங்கலான் படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தங்கலான் 2 படத்தை விரைவில் எடுக்கலாம் என நான், ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் பேசிவருகிறோம்” எனக் கூறியுள்ளார்.