ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (19:57 IST)

’தளபதி 66’ முதல் பாடல் ரெடி: பாடியவர்கள் விஜய் டிவி பிரபலங்கள்!

தளபதி விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ என்பவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்திற்கு இசையமைப்பாளராக தமன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தனது பாடல் கம்போசிங் பணியை ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது 
 
இந்த படத்தின் முதல் பாடல் தயாராகி விட்டதாகவும் இந்த பாடலை விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செந்தில் மற்றும் ராஜலட்சுமி இணைந்து பாடி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன