ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 10 ஜூன் 2023 (15:11 IST)

அதுப்பில் ஆடிய ஜோதிகா... கடுப்பில் இருந்த விஜய்.... பழைய பகை தீர்க்க " தளபதி 68" தான் சரியான நேரம்!

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர் விஜய் தற்போதைய வாலிப வட்டத்தை ரவுண்ட் அப் செய்து வைத்திருக்கிறார். இவர் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது  68ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். 
 
லியோ படம் முடிந்ததும் அதற்கான வேளையில் மும்முரமாக இறங்கவுள்ளாராம் விஜய். கல்பாத்தி எஸ்.அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க்கும் இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 2024ஆம் ஆண்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 
 
இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்க உள்ளாராம். விஜய் மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த குஷி, திருமலை என இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டானது. ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தில் ஜோதிகா கமிட்டாகி நடித்து வந்துள்ளார். ஆனால் கதையில் சில காட்சிகளை மாற்ற சொன்னாராம் ஜோதிகா.
 
 அதை காதில் கூட அட்லீ வாங்காததால் அப்படத்தில் இருந்து விஜய்யிடம் கூட சொல்லாமல் நடித்துக்கொண்டிருக்கும்போதே வெளியேறியுள்ளார். இதனால் விஜய் ஜோதிகா மீது செம கடுப்பில் இருந்தாராம். இப்படியான நேரத்தில் வெங்கட் பிறப்பது ஜோதிகா தான் தளபதி 68 படத்தின் ஹீரோயின் என ஒற்றை காலில் நின்றுவிட்டாராம். இதை விஜய் ஏற்றுக்கொள்வாரா என பார்ப்போம்