Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

'தளபதி 61' படத்தின் அடுத்தகட்ட திட்டம். அட்லி முடிவு

vijay 61" width="600" />
sivalingam| Last Updated: புதன், 15 மார்ச் 2017 (14:46 IST)
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வளர்ந்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய், நித்யாமேனன் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

 


முதலில் பின்னி மில்லில் பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இம்மாத இறுதி வரை அங்கே படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் வசன காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு பாடல் காட்சிகளின் படப்பிடிப்பை அட்லி தொடங்க முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்காக ஆஸ்கர் நாயகன் ஏ,.ஆ.ரஹ்மான் இரண்டு பாடல்களின் கம்போசிங்கை முடித்துவிட்டதாகவும் இன்னும் மூன்று பாடல்களின் கம்போசிங்கை இன்னும் ஒருசில நாட்களில் அவர் முடித்துவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வழக்கமாக விஜய் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடி வரும் நிலையில் இந்த படத்திலும் ரஹ்மான் இசையில் ஒரு பாடலை பாட முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த பாடலின் ஒலிப்பதிவு விரைவில் நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :