Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

'தளபதி 61' டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்


sivalingam| Last Modified திங்கள், 19 ஜூன் 2017 (23:44 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் 22ஆம் தேதி விஜய் பிறந்த தினம் அன்று வெளியாகும் என்று படக்குழுவினர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


 


இந்த நிலையில் ஜூன் 22ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 21ஆம் தேதியே 'தளபதி 61' பர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளதாக சற்றுமுன் வெளிவந்த செய்தி கூறுகின்றது. எனவே தளபதி விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் ஒருநாளுக்கு முன்பே ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனேகமாக இந்த படத்தின் டைட்டில் 'மூன்று முகம்' என்று தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியான முதல் நொடி முதல் இணையதளங்களில் வைரலாக்க விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :