செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (23:33 IST)

முதல்முறையாக விஜய் பட ஆடியோ விழா நேரடி ஒளிபரப்பு. விஜய் ரசிகர்கள் குஷி

விஜய் படத்தின் ஆடியோ விழா என்றாலே ஒரு திருவிழா மாதிரி பிரமாண்டமாக நடைபெறும், ஆனால் அதில் ஒரு ஒரே ஒரு குறை என்னவெனில் ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டுமே ஆடியோ விழாவுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் ஒருவாரமோ சில நாட்களோ கழித்து தொலைக்காட்சியில் ஆடியோ விழாவை கண்டு ரசிப்பார்கள்



 
 
ஆனால் விஜய் ரசிகர்களை ஆனந்தப்படும் செய்தி ஒன்றாக 'மெர்சல்' படத்தின் ஆடியோ விழா நேரடியாக ஜீதமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவிருக்கின்றது ஒன்று வெளிவந்துள்ளது. விஜய் பட வரலாற்றில் மட்டுமின்றி தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு ஆடியோ விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவது அனேகமாக இதுவாகத்தான் இருக்க வேண்டும்
 
வரும் 20ஆம் தேதி இரவு 7 மணி முதல் ஜீதமிழ் தொலைக்காட்சியில் 'மெர்சல் ஆடியோ விழா நேரடி ஒளிபரப்பு ஆகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கும் பெரும் குஷியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.