செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 4 பிப்ரவரி 2019 (11:45 IST)

தளபதி 63: விஜய் கதாபாத்திரத்தின் பெயர் இது தானாம் ..!

தளபதி 63 படத்தில் நடிகர் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 


 
சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் "தளபதி விஜய் 63"  படத்தில் நடித்துவருகிறார். தெறி மற்றும் மெர்சல் போன்ற மெகா ஹிட் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் 3 ஆவது முறையாக விஜய் டிக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் (கல்பாத்தி எஸ் அகோரம்) தயாரிக்கிறது.  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, வில்லு படத்தைத் தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா இப்படத்தில் நடிக்கிறார். 
 
கால்பந்தாட்டத்தின் கோச்சாக விஜய் நடிக்கும் இப்படத்தில் கதிர், விவேக், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, யோகி பாபு ஆகியோர் பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், தளபதி விஜய் அவர்கள் இப்படத்தில் "மைக்கேல்" என்றல் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. ஆக விரைவில் படக்குழுவினர் தரப்பில் இருந்து அதிகார பூர்வ தகவல் வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.