1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2016 (10:02 IST)

தளபதி இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி

தளபதி இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி

சுசீந்திரன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த உதயநிதி அப்படத்திலிருந்து விலகியதும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார். அவர் நடிக்கும் புதிய படத்தை எழில் இயக்குகிறார்.


 
 
அத்துடன் கௌரவ் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இன்னொரு படமும் உதயநிதி கைவசம் உள்ளது.
 
இந்நிலையில், பொன்ராமின் உதவி இயக்குனர் தளபதி இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார் உதயநிதி. கிராமத்துப் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தில் அனேகமாக கேத்ரின் தெரேசா அவருடன் நடிக்கக் கூடும் என்கிறார்கள்.