1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (16:32 IST)

விஜய் 66 பட ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

விஜய் 66 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் 6 ஆம் தேதி தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

காவலன் படத்துக்கு பிறகு விஜய் ஆக்‌ஷன் கம்மியாகவும், செண்ட்டிமெண்ட் மற்றும் காதல் காட்சிகள் அதிகமாகவும் கொண்டு இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யைத் தவிர பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே ஏப்ரல் 6 ஆம் தெதி கிழக்கு கடற்கரைச் சாலையில் நடக்க உள்ளதாம். முதலில் ஒரு பாடலை படக்குழு படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.