நாளை காலை 9.09க்கு ‘தளபதி 65’ அறிவிப்பா?
தளபதி விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி 65 திரைப்படம் உருவாக இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் அந்த படத்திலிருந்து ஏஆர் முருகதாஸ் விலகியதை அடுத்து இந்த படத்தை நெல்சன் இயக்குவார் என்று கூறப்பட்டது
ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய நெல்சன், தளபதி 65படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றதாகவும் விஜய் வட்டாரங்கள் கூறின. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நாளை காலை 9.09 மணிக்கு ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தளபதி 65 படத்தின் அறிவிப்பு தான் என்றும் கூறப்படுகிறது
இதனையடுத்து நாளை வெளிவரவிருக்கும் அறிவிப்பு தளபதி 65 அறிவிப்பா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்