திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 5 டிசம்பர் 2019 (19:50 IST)

தளபதி 64: விஜய் டயலாக்கை இப்படி தான் மனப்பாடம் செய்வார் - பிரபலம் சொன்ன சீக்ரெட்!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 
 
சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்  நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கும் டான்ஸர்  விக்கி தளபதி 64 படத்தில் நடிக்கும் அனுபவத்தை குறித்து பேசியுள்ளார். " நான் இந்த படத்தில் நடனமாட தான் வந்தேன். அந்த சமயத்தில் ஒரு டான்சரை படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு என்ன தேர்வு செய்தனர். லோகேஷ் கனகராஜ் சார் என்னிடம் படத்தில் நடிக்கிறியா என கேட்டதும் ஓகே சொல்லிட்டேன். 
 
விஜய் சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருடைய டயலாக் எல்லாம் அப்படியே பல்லை கடித்துக் கொண்டு சொல்லுவார். ஆனால், அவர் டயலாக் மனப்பாடம் பண்றார் என்பதே நமக்கு தெரியாது. எவ்வளவு பெரிய வசனமாக  இருந்தாலும் இப்படித் தான் ப்ராக்டிஸ் பண்ணி ஒரே டேக்கில் ஓகே பண்ணிடுவாரு. டான்ஸ்ல எப்படி அவர் கில்லியோ அதே மாதிரி தான் ஆக்டிங்கிலும் கில்லி என மிகுந்த உற்சாகத்துடன் டான்சர் விக்கி தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.