1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 27 மே 2017 (07:12 IST)

தளபதி 61' படத்துக்கு இப்படி ஒரு பெருமையா?

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் நடந்து வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பில் சமந்தா கலந்து கொள்ளவுள்ளார்.



 


இந்த நிலையில் இந்த படம் சில அபூர்வ பெருமைகளை பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமான இளையதளபதி, திரையுலகில் காலடி எடுத்து வைத்து இந்த வருடத்துடன் 25 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது. அதேபோல் அதே 1992ஆம் ஆண்டுதான் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். எனவே ரஹ்மானுக்கும் இது 25வது திரையுலக ஆண்டு ஆகும்

மேலும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம் என்ற பெருமையும் இந்த படத்திற்கு உள்ளது. விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், தேனாண்டாள் நிறுவனம் என மூவருக்குமே முக்கியமான படமான இந்த படம் வசூலிலும் சாதனை செய்து இன்னொரு பெருமையையும் இணைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்