ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2023 (11:09 IST)

தலைவர் 171 படம் LCU வில் இடம்பெறுமா? லோகேஷ் அளித்த பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படம் பற்றி சமீபத்தில் பேசியுள்ள இயக்குனர் லோகேஷ் “இந்த கதையை நான் மாநகரம் படத்துக்கு முன்பாக எழுதினேன். ஆனால் அப்போது ரஜினி சாரை மனதில் வைத்தெல்லாம் எழுதவில்லை. அப்போது அந்த கற்பனை கூட எனக்கில்லை” எனக் கூறியுள்ளார்.

மேலும் அந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இடம்பெறுமா என்பது குறித்து ஒரு நேர்காணலில் பதிலளித்த லோகேஷ், “தலைவர் படம் LCU வில் இடம்பெறாது. அது ஒரு தனிக்கதைதான்” எனக் கூறியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த் ஆண்டு ரஜினி தன்னுடைய 170 ஆவது படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் தொடரும் என சொல்லப்படுகிறது.