அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா விஷ்ணுவர்தன்: டுவிட்டரில் சூசக தகவல்

Last Modified வியாழன், 14 டிசம்பர் 2017 (23:26 IST)
அஜித் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கிய பில்லா' திரைப்படம் வெளிவந்து இன்றுடன் பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டது. இதனை அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த ஹேஷ்டேக் ஒன்று இந்திய அளவில் டிரெண்டுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து தனது மலரும் நினைவுகளை இயக்குனர் விஷ்ணுவர்தன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அஜித்துடன் நான் இணைந்த முதல் படம் 'பில்லா. பத்து வருடங்கள் போனதே தெரியவில்லை. அஜித்துக்கும், இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் கு'றிப்பாக அஜித் ரசிகர்களுக்கும் எனது நன்றி என்று கூறியுள்ளார்

மேலும் ஒரு பெரிய திட்டம் மனதில் இருப்பதாகவும், இதுகுறித்து விரைவில் ஒரு நல்ல செய்தி சொல்லப்போவதாகவும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே எழுத்தாளர் பாலகுமாரன் உதவியுடன் அஜித்துக்காக 'ராஜராஜ சோழன்' கதையை விஷ்ணுவர்தன் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :