வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 பிப்ரவரி 2019 (07:45 IST)

அஜித் பட இயக்குனர் எச்.வினோத் திடீர் நீக்கமா?

அஜித் நடித்து வரும் 'பிங்க்' ரீமேக் படமான 'தல 59' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருவது தெரிந்ததே. இந்த படத்தை தயாரிக்கும் போனிகபூர், இயக்கும் எச்.வினோத், 'தல 60' படத்திலும் இணையவுள்ளதாகவும், இந்த படம் எச்.வினோத்தின் ஒரிஜினல் கதை என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக 'தல 60' படத்தை வெங்கட்பிரபு இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படம் 'மங்காத்தா 2' என்றும் செய்திகள் இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இயக்குனர் மாறினாலும் இந்த படத்தை தயாரிப்பது போனிகபூர்தான் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் 'தல 61' படத்தை எச்.வினோத் இயக்குவார் என தெரிகிறது.

ஏற்கனவே சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் வெங்கட்பிரபு, 'அஜித் படத்தை விரைவில் இயக்குவேன் என்றும், அது மங்காத்தா 2' படமா? அல்லது வேறு கதையா? என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்-வெங்கட்பிரபு கூட்டணி மீண்டும் இணைந்து அது 'மங்காத்தா 2' படமாக இருந்தால் அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும் என்பது மட்டுமின்றி தமிழ் சினிமாவின் அதிக வசூல் பெற்ற படம் என்ற புகழை பெறவும் வாய்ப்பு உள்ளது