தெலுங்கு வீரத்தில் இயக்குனர் மகேந்திரன்

Sasikala| Last Modified செவ்வாய், 3 ஜனவரி 2017 (14:16 IST)
சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடித்த வீரம் திரைப்படம் தெலுங்கில் கட்டமநாயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

 
அஜித் நடித்த வேடத்தில் பவன் கல்யாணும், தமன்னா நடித்த வேடத்தில் ஸ்ருதியும் நடிக்கின்றனர். சமீபத்தில் இதன் பர்ஸ்ட்  லுக் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.
 
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் மகேந்திரன் நடிக்கிறார். தெறி படத்தில் வில்லனாக நடித்து நடிப்பு  வாழ்க்கையை தொடங்கிய மகேந்திரனுக்கு கிடைத்திருக்கும் மற்றொரு முக்கியமான படம் இது.
 
தமன்னாவின் தந்தையாக நாசர் நடித்த வேடத்தில் மகேந்திரன் அனேகமாக நடிக்கக்கூடும் என்கிறார்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :