மக்கள் வரிப்பணம் வீணாகிறது - சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அரவிந்த்சாமி கண்டனம்
அதிமுக தமிழக அரசியலில் நடத்திவரும் கேலிக்கூத்துகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் அரவிந்த்சாமி. மக்கள் நலன்சார்ந்த அவரது பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
நேற்று சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த நிலையிலும் எம்.எல்.ஏ.க்கள் ரிசாட்டிலிருந்து வெளியேறாமல் உள்ளனர். இந்த சூழலை அரவிந்த்சாமி கண்டித்துள்ளார்.
"எம்.எல்.ஏக்களை மக்கள் எளிதாக தொடர்புகொள்ள முடியாத வரை, எல்லாம் வெளிப்படையாக இல்லாத வரை, அவர்களது தலைவர் தேர்விலோ, கட்சியிலோ, ஆட்சியிலோ அவர்களது சொந்த விருப்பம் என்ன என்பது சந்தேகத்துக்கிடமாகவே இருக்கும்.
விடுமுறையைக் கழிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் விடுதியின் வெளியே ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.