1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 30 ஜனவரி 2015 (09:28 IST)

தாப்ஸியின் அதிகபட்ச சினிமா ஆசை என்ன தெரியுமா?

பட் படாரென்று தனது எண்ணத்தை வெளிப்படுத்துகிறவர் தாப்ஸி. உடன் நடிக்கும் எந்த நடிகருடனும் படப்பிடிப்பு தளத்துக்கு வெளியே எந்த உறவும் இவர் வைத்துக் கொள்வதில்லை. அதனால் திரையுலக நண்பர்கள் தாப்ஸிக்கு குறைவு.
தாப்ஸி நடித்த பேபி இந்திப் படம் நன்றாகப் போவதால் இந்தியில் அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. சில நடிகைகள் தலைகீழக நின்றும் கிடைக்காத வரம் இது.
 
இந்தியில் வாய்ப்புகள் வந்தாலும், தாப்ஸியின் தலையாய விருப்பம் என்ன தெரியுமா? மணிரத்னத்தின் படத்தில் சின்ன வேடத்திலாவது நடிக்க வேண்டும். அந்தளவுக்கு மணிரத்னம் படம் என்றால் தாப்ஸிக்கு உயிராம்.
 
மணிரத்னம் எப்போது தாப்ஸியின் ஆசைக்கு ஓகே கண்மணி  சொல்லப் போகிறாரோ.