1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (13:56 IST)

டாப்சி, அனுராக் காஷ்யப் வீடுகளில் ரெய்டு; 350 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு!

நடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் விகாஸ் பஹல் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011ல் அனுராக் காஷ்யப், விகாஸ் பஹல் ஆகியோர் இணைந்து தொடங்கிய பேண்டம் பிலிம்ஸ் என்ற நிறுவனம் 2018ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த நிலையில் அந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில் நிறுவன பங்குதாரர்களான அனுராக் காஷ்யப், விகாஸ் பஹல் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 350 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதுபோல டாப்சி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 5 கோடி ரூபாய் பணம் ஆவணங்களின்றி இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.