செல்ஃபியால் வருந்திய டாப்ஸி


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2017 (14:05 IST)
ரசிகர்களின் செல்ஃபி தொல்லையால் நடிகை டாப்ஸி விமானத்தை தவறவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடிந்து வந்த டாப்ஸி தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்காக மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். நேரம் கிடைத்துக்கும்போது சொந்த ஊரான டெல்லிக்கு அவ்வப்போது அவர் சென்று வருவது வழக்கம்.
 
சமீபத்தில் மும்பையில் இருந்து டெல்லி சென்றுவிட்டு மும்பை திரும்ப டெல்லி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு டாப்ஸியை கண்டதும் ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர். அவர்களுடன் பொறுமையாக செல்ஃபி எடுத்துக்கொண்ட டாப்ஸி விமானத்தை தவறவிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நான் பெரும்பாலும் வெளியே சென்றால் யாருடனும் செல்ஃபி எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் விமான நிலையத்தில் இருந்தவர்களின் பெரும்பாலானோர் குழந்தைகள். அதுவும் அவர்கள் என் நடிப்பு குறித்து என்னிடம் விரிவாக பேசியதால், அவர்களுக்கு மதிப்பு கொடுத்து செல்ஃபி எடுத்துக்கொண்டேன். அதில் நேரம் போனதே தெரியவில்லை என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :