1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (12:32 IST)

இது கொஞ்சம் பரவால்லப்பா… தமன்னாவின் நவம்பர் ஸ்டோரிஸ் பாஸிட்டிவ் விமர்சனங்கள்!

தமன்னா மற்றும் பலர் நடித்துள்ள நவம்பர் ஸ்டோரிஸ் எனும் வெப் சீரிஸ் ஹாடஸ்டாரில் ரிலிஸாகியுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள நிலையில் வெப் சீரிஸ்களும் உருவாக ஆரம்பித்துள்ளன. இதனால் திரை நட்சத்திரங்களும் அதில் ஆர்வமாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள நவம்பர் ஸ்டோரி எனும் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதை ராம் சுப்ரமண்யம் இயக்கியுள்ளார். தமன்னா இதில் ஹேக்கராக நடித்துள்ளார்.

நேற்று வெளியான இந்த சீரியல் பார்வையாளர்களிடம் பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதுவரை தமிழில் வந்த எந்த வெப்சீரிஸும் பார்வையாளர்களை திருப்தி படுத்தாத நிலையில் நவம்பர் ஸ்டோரிஸ் விறுவிறுப்பாக இருப்பதாகப் பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.