1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (20:38 IST)

தமிழ்ப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ! வித்தியாசமாகக் கொண்டாடும் படக்குழு !

தமிழ் சினிமாவைக் கலாய்த்து உருவான தமிழ்ப் படம் முதல் பாகம் வெளியாகி நாளையோடு 10 ஆண்டுகள் ஆக இருப்பதை அடுத்து அதை வித்தியாசமாகக் கொண்டாட உள்ளது படக்குழு.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி சிவா நடிப்பில் சி எஸ் அமுதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தமிழ்ப்படம். தமிழ் சினிமாவில் வெளியான படங்களைக் கலாய்த்தும் ஹீரோக்களையும் வைத்து செய்தும் உருவான இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆரவாரமான வரவேற்பை அளித்தனர்.

கடந்த ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் முதல்பாகம் வெளியாகி நாளையோடு 10 ஆண்டுகள் ஆவதை இயக்குனர் சி எஸ் அமுதன் ஒரு டிவிட் மூலம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது டிவிட்டில் ‘நாளையோடு நான் திரையுலகத்துக்கு வந்து 10 ஆண்டுகள் நாளையோடு ஆகிறது. ரசிகர்களின் பாதுகாப்புக்காக நேரு ஸ்டேடியத்தில் மிகப்பெரிய விழா கொண்டாடவில்லை. அதற்குப் பதிலாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட உள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.