வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 மார்ச் 2023 (08:25 IST)

வெளியாகி 6 வாரத்துக்குப் பின்பே ஓடிடியில்- தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் முடிவு!

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ள கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளன. இது சம்மந்தமாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் படி படங்கள் இனிமேல் திரையரங்குகளில் வெளியாகி 6 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும் என்றும், மேலும் தயாரிப்பாளர்கள் படத்தை எந்த ஓடிடிக்கு விற்கிறார்கள் மற்றும் எந்த தேதியில் ரிலீஸ் ஆகப் போகிறது என்பதை அறிவிக்க கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன.

இந்த முடிவுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தற்போது திரையரங்குக்கு நிகரான வருமானத்தை ஓடிடியில் இருந்தும் தயாரிப்பாளர்கள் ஈட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.