Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழ்ப் படம் பாகம் 2...?


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:03 IST)
தமிழ் சினிமாவையும், நட்சத்திரங்களையும் கலாய்த்து எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் ஹிட்டானது. அதனை இயக்கிய சிஎஸ் அமுதன், ரெண்டாவது படம் என்ற படத்தை இயக்கினார். இன்றைய தேதிவரை படம் வெளியாகவில்லை. அந்தப் படத்தின் கதி அதோகதி என்கிறார்கள்.

 
 
இந்நிலையில் விட்ட இடத்திலிருந்தே தொடர்வது என்று அமுதன் முடிவு செய்துள்ளார். 'இப்போது தமிழ்ப் படம் 2 செய்தால் எப்படியிருக்கும்' என்று அமுதன் ட்வீட் செய்ய, தமிழ்ப் படத்தின் எக்ஸிக்யூடிவ் புரொடியூசரும், ஒய் நாட் ஸ்டுடியோஸ் எம்டியுமான சஷிகாந்த், 'வரலாம் வரலாம்... நீங்க ரெடியா' என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.
 
இவர்கள் போடும் இந்த ட்வீட் ட்ராமாவைப் பார்த்தால் ஏற்கனவே பேசி வைத்து விளையாடுவது போல் உள்ளது. சஷிகாந்த் தயாரிப்பில் அமுதன் இயக்கத்தில் தமிழ்ப்படம் 2 விரைவில் ஆரம்பிக்கப்படலாம்.


இதில் மேலும் படிக்கவும் :