வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (11:05 IST)

ஓபிஎஸ் போல் திடீர் தியானம் செய்யும் தமிழ்ப்படம் நடிகர்

சென்னை மெரீனாவில் தற்போது துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த ஒரு மணி நேரம் தியானம் அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்தியது

இந்த நிலையில் நடிகர் மிர்ச்சி சிவா நடித்த 'தமிழ்ப்படம்' படத்தின் இரண்டாம் பாகமான 'தமிழ்ப்படம் 2.0' படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் துணை முதல்வர் ஓபிஎஸ் தியானம் செய்தது போலவே சிவா தியானம் செய்யும் காட்சி உள்ளது.

ஏற்கனவே இந்த படம் ஒரு அரசியல் நையாண்டி திரைப்படம் என்று கூறப்பட்ட நிலையில், ஆளுங்கட்சியை கலாய்த்து எடுக்கப்படுவது தற்போது உறுதியாகியுள்ளது. இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.