செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By சினோஜ் கியான்
Last Updated : புதன், 20 நவம்பர் 2019 (19:09 IST)

என்னை வாழவைத்த’ தமிழ் தெய்வங்கள் ’... நன்றி மறவாத ரஜினி ! இளம் நடிகர்கள் கற்றுக்கொள்வார்களா ??

நடிகர் ரஜினி சினிமாவில் நடித்து சூப்பர் ஸ்டாராக ஆகவில்லை என்றாலும், அவர் சூப்பர் கண்டக்டர் என்று கர்நாடகாவில் பெயர் எடுத்து, இன்றும் ரிட்டயர்டாகி நிம்மதியாக வாழ்க்கை நடத்திக்கொண்டுதான் இருந்திருப்பார். ஆனால் அவரது இடைவிடாத உழைப்பினால், தொழிலில் காட்டிய பக்தியினால் இன்று கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ’ஐ கான் ஆஃ த  கொல்டன் ஜூபிலி’ என்ற பெரும் விருதுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
இதனை அவரது அதிர்ஷ்டம் என்று சொல்லுபவர்கள் உண்மையான உழைப்பின் அருமையை, காலத்தின் புனிதத்தை அறியாதவர்கள். இன்று தனது 44 வருட சினிமா வாழ்க்கையில், பல திரைப் படங்களில் நடித்து, இப்போதும் அனைத்து இந்திய மொழி இளைய நடிகர்களுக்கும் சிறந்த முன்மாதிரியாக உள்ளார்.
 
இன்று ரஜினிக்கு கொடுத்த ICON OF GOLDEN JUBILEE  என்ற விருதால், இந்திய அரசுக்கும், அந்த விருதுக்கும் இந்திய சினிமாவுக்கு பெருமை. 
 
இதில்,நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த  விருதினை வாங்கிய பின், விழா மேடையில் பேசிய ரஜினிகாந்த், எனக்கு விருது  வழங்கி கௌரவித்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவா முதல்வர் , எனக்கு முன்மாதிரியாகத் திகழும் அபிதாப்பச்சனுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
 
அதைத்தொடர்ந்து, தமிழில் பேசிய ரஜினிகாந்த், ’என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி ’ இந்த விருதை தமிழக மக்கள் , தாயரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்களுக்கு  சமர்பிக்கிறேன் என தெரிவித்தார்.
 
தனது இத்துணை வருட சினிமா வாழ்க்கையில் ரஜினி எத்தனையோ ஜாம்பாவான்களைச் சந்தித்திருப்பார். பழகியிருப்பார், விருதுகள் பெற்றிருப்பார், ஏன் பல உலக நாடுகளுக்கும் சென்றிருப்பார். ஆனால் இன்றுவரை தன்னை வாழவைத்த தமிழ் மக்களை தெய்வமாகவே மதித்துக்கொண்டுள்ளார் எனபதை இன்றைய அவரது பேச்சிலேயே தெரிந்துகொள்ளலாம்.
 
ரஜினியிடம், அமைந்துள்ள அந்த அடக்கமும் ,அவரது எளிய குணமும்தாம் எல்லோரையும் அவர்பால் ஈர்க்க வைக்கவைக்கிறது. 
 
இப்போதைய இளைய நடிகர்களும் ரஜினியை முன்மாதிரியாகக் கொண்டால் அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது என சினிமா நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
 
நாமும், சினிமாவில் 44 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினியை வாழ்த்துவோம்.