ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2017 (11:21 IST)

பிக்பாஸ்: தலைவர் பதவியை இழந்த சினேகன்: புதிய தலைவர் காயத்ரி

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் சென்று வரும் நிலையில் இன்று புதிய தலைவராக காயத்ரி ரகுராம் தேர்வு செய்யப்பட்டார்.



 
 
பிக்பாஸ் விதிகளின்படி தலைவர் பதவி ஒரு வாரம் மட்டுமே செல்லுபடியாகும். எனவே இன்று புதிய தலைவரை அனைவரும் சேர்ந்து தேர்வு செய்தனர். கணேஷ் வெங்கட்ராமன், காயத்ரி ரகுராம் ஆகியோர்களை பிக்பாஸ் தலைவர் தேர்தலின் வேட்பாளர்களாக அறிவித்தார்.
 
இதில் ஓரிருவரை தவிர அனைவரும் காயத்ரிக்கு ஓட்டு போட்டனர். குறிப்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கணேஷே, காயத்ரிக்கு ஓட்டுப்போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் காயத்ரிக்கு 9 வாக்குகளும், கணேஷுக்கு 4 வாக்குகளும் கிடைத்தது. இதனையடுத்து அதிக வாக்குகள் பெற்று காயத்ரி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஒரு வாரத்திற்கு தலைவராக இருப்பார்.