செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (16:35 IST)

தமிழ் நடிகர் விபத்தில் உயிரிழப்பு

செங்குன்றம் என்ற புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்த ஜெயக்குமார் என்பவர்  விபத்தில் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் என்ற நகரிலுள்ள ஜீவா தெருவில் வசித்து வந்தவர் ஜெயக்குமார்(40). இவர் செங்குன்றம் என்ற புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார்.

இந்நிலையில். கடந்த 30 ஆம் தேதி இரவு படப்பிடிப்பை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிய                                                                        ஜெயக்குமார் விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.