செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (13:10 IST)

தமன்னா நடிக்கும் ‘பப்ளி பவுன்சர்’... நேரடி ஓடிடி ரிலீஸ்… வெளியான அறிவிப்பு

தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு  ‘நவம்பர் ஸ்டோரிஸ்’ வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேலும் ரசிகர்களைக் கவரும் விதமாகவும், பட வாய்ப்புகள் பெறும் விதமாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் அவர் நடித்துள்ள பலமொழி திரைப்படமான ‘பப்ளி பவுன்சர்’ நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 23 முதல் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை பாலிவுட் இயக்குனர் மதூர் பண்டார்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தமன்னா ஒரு பவுன்ஸராக நடித்துள்ளார்.